பரோட்டா சாப்பிட்டதால் பறிபோன மாணவி உயிர்.. கேரளாவில் சோகம்..

 
பரோட்டா சாப்பிட்டதால் பறிபோன மாணவி உயிர்.. கேரளாவில் சோகம்..

கேரளாவில் பரோட்டா சாப்பிட்டதால் பிளஸ் 1  மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வாழைத்தோப்பு  பகுதியை சேர்ந்த சிஜூ கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா (16). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். நயன்மரியா கடந்த  சில தினங்களுக்கு முன்பு இரவில் பரோட்டா சாப்பிட்டுள்ளார்.  அதனால் அவரது உடலில் எதிர்பாராத விதமாக சில உபாதைகள் (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது.  இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நயன் மரியா சிகிச்சை பலன்களை பரிதாபமாக உயிரிழந்தார்.

parotta

ஏற்கனவே நயன் மரியாவிற்கு மைதா மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்  அண்மை காலமாக அவரது உடல்நிலை முன்னேறியிருக்கிறது.  அதன் பின்னர் மைதா மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது அவருக்கு அலர்ஜி ஏற்படுவதும் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில காலமாகவே அதிகப்படியாக மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை அவர் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.  இதுவே தற்போது அவரது உயிரை பறித்திருக்கிறது.

கடந்த  சில தினங்களுக்கு முன்பு இரவில், நயன்மரியா  பரோட்டா சாப்பிட்டு உள்ளார்.  அதற்கு அடுத்த நாளை அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் உடலில் சில மோசமான அறிகுறிகள் தென்பட்டதால்,  அவரது பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.  ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.  பரோட்டா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

dead

பொதுவாகவே மைதா சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  மைதாவால் ஆன உணவை சாப்பிடும் போது நமது கெட்ட கொழுப்பை அது அதிகரிக்கிறது.  உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது அது தமனிகளை அடைத்து,  ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.  மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அது சீர்குலைகிறது.  இது நம்மை எப்போதும் பசியுடன் நீயே வைத்திருக்குமாம்.  இது போன்ற உடலுக்கு அதிக கேடு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.