ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம் - மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது. பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கினர்.
மிதக்கும் டெல்லி..
— உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) July 28, 2024
கடும் வெள்ளத்தில் IAS பயிற்சி பெற்று வந்த 3 மாணவர்கள் பலியாகி விட்டனர்.
மோடி அரசின் கையாலாகாத தனத்திற்கு எதிர்கால IAS அதிகாரிகளை பலி கொடுக்க வேண்டி இருக்கிறது. pic.twitter.com/3VpjNEDNdS
தண்ணீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. 3 மாணவரிகளின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென மாணவர்கள் ஆவேசமாக கூறிவருகின்றனர். மேலும் அரசு சார்பில் சம்பவ இடத்திற்கு வந்து யாரும் பார்வையிடவில்லை என பயிற்சி மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்!!
— Jai Samvidhan/அரசியல் சாசனம் வாழ்க (@SamvidhanJai) July 28, 2024
நிலத்தடி வெள்ளத்தில் மூழ்கிய 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் ராஜேந்திரநகரில் படேல்நகரில் மேலும் ஒரு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் , அதிகாரிகளின் மெதுவான பதில் பொறுப்புக்கூறல் மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. pic.twitter.com/pyHK3OJuJg
இதனிடையே பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ராஜேந்திரநகரில் படேல்நகரில் மேலும் ஒரு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.


