”மோடிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது”இதற்கு சாத்தியமே இல்லை - சுப்பிரமணியசுவாமி விமர்சனம்!

 
subramaniaswamy subramaniaswamy

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை எனவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பைத்தியம் பிடித்து விட்டது எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி விமர்சித்துள்ளார். 

’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நாடாளுமன்ற இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை எனவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பைத்தியம் பிடித்து விட்டது எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி, "ஒருவேளை ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறினால் அதற்கு எதிராக நிச்சயம் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என கூறினார்.