SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

 
tn

எஸ்.பி.ஐ. வங்கி நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று  உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று  தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது. இதை தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த SBI, ஒவ்வொரு பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை.

இந்நிலையில்  தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை.

supreme court

அனைத்து தரவுகளையும் வெளியிட உத்தரவிட்டும் எஸ்.பி.ஐ. ஏன் எண்களை வெளியிடவில்லை? அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் என்று கூறியுள்ளது.