மணிப்பூர் சம்பவம் - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

 
supreme court

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான செயலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சூகி பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF தேசிய மகளிர் ஆணையத்திடமும், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடமும் முறையிட்டுள்ளது.  

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்கவே முடியாது. இது மிகவும் கவலையளிக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்தார். மேலும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.