சுஷ்மா ஸ்வராஜ் கணவர் காலமானார்

 
ச் ச்

பாஜகவின் மூத்த பெண் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் (73) காலமானார்.

Sushma Swaraj's Husband Swaraj Kaushal Dies At 73; BJP Leaders Pay Tribute


ஸ்வராஜ் கௌஷல் ஜூலை 12, 1952 இல் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், அதன் பிறகு அவர் சட்டப் பயிற்சி செய்யத் தொடங்கினார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராக பணியாற்றிய அவர், ஆறு ஆண்டுகள் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிசோரம் ஆளுநராகவும் பதவி வகித்தார். ஆளுநர் பதவியை வகித்த இளைய நபர் என்ற பெருமையையும் ஸ்வராஜ் கௌஷல் பெற்றார். அவர் 1975 இல் சுஷ்மா ஸ்வராஜை மணந்தார்.

அவரது மறைவு குறித்த தகவலை டெல்லி பாஜக தனது X பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், அவரது இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு லோதி சாலை தகனக்கூடத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.