உயிருக்கு உயிராய் தன்னை நேசித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இளைஞர்

 
ச்

தெலுங்கானாவில் ஒரே மணமேடையில் இரண்டு காதலிகளை மணந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Telangana Man Falls In Love With 2 Women, Marries Both of Them At The Same  Mandap


தெலுங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் கும்மூர் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி சூரிய தேவ். அதே கிராமத்தை சேர்ந்த லால் தேவி, ஜல்க்கர் தேவி ஆகியோர் சூரியதேவ்வை காதலித்து வந்தனர். இந்த முக்கோண காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு  தெரிய வரவே, இது ஒத்து வராத விவகாரம் என்று அவர்களை கண்டித்தனர். ஆனால் இளம் பெண்கள் இரண்டு பேரும் சூரிய தேவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்தனர். 

மூன்று பேரும் மேஜர் என்பதால், இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில், அவர்களுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அப்போது சூரியதேவ் ஒரே மேடையில் இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்து தாலி கட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.