'மயில் கறி சமைப்பது எப்படி?'- யூடியூபர் மீது வழக்குப்பதிவு

 
Telangana YouTuber Shoots Video Making 'Peacock Curry', Arrested After Massive Backlash

தெலங்கானாவில் 'மயில் கறி சமைப்பது எப்படி?' என யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. 

Telangana YouTuber Booked Over Video Of 'Peacock Curry'

தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், பிரணாய் குமார் என்பவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பாரம்பரிய உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடுவது குறித்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் 'மயில் கறி சமைப்பது எப்படி?' என வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளார். பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால், பிரணாய்யை கைது செய்த வனத்துறையினர், அவர் 'மயில் கறி' சமைத்த இடத்தை ஆய்வு செய்து வீடியோ எடுத்தனர்.

யூடியூபர் தனது சேனலுக்கு அதிக பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த செயலை மேற்கொண்டதாக வன அதிகாரி ஒருவர் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்.  விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை எழுப்பியதையடுத்து, வீடியோ யூடியூபில் இருந்து அகற்றப்பட்டது. இந்தியாவின் தேசிய பறவையான மயில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 51 (1-A) இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது, மேலும் அதை வேட்டையாடுவதும் கொல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.