‘நான் என்ன பேச வேண்டும் சொல்லுங்க’ - நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி..!

 
modi modi

நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நான் என்ன பேச வேண்டும் என பரிந்துரைகளை வழங்குமாறு  நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 79வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பன்னிரண்டாவது முறையாக செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவர்ண கொடியை ஏற்ற இருக்கிறார். அப்போது அவர்  நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்த உரையின்போது பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறுவதோடு முக்கியமான பல அம்சங்களையும் சுட்டிக்காட்டி பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

78வது சுதந்திர தினம் - மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..  

இந்நிலையில் சுதந்திர தின உரையின் போது தான் என்ன பேச வேண்டும்? என்று நாட்டு மக்கள் பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் எந்த கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் 79வது கொண்டாட்ட உ ரை அமைய வேண்டும் என்பது குறித்தான பரிந்துரைகளையும் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்கள் அவர்களின் பரிந்துரைகளை my.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வழங்க வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 ‘நான் என்ன பேச வேண்டும் சொல்லுங்க’ - நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி..!