சந்திரபாபு நாயுடு கைது சம்பவத்தை அறிந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர் உயிரிழப்பு
சந்திரபாபு நாயுடு கைது சம்பவத்தை அறிந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர் கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள தொட்டம்பேடு மண்டலம் தங்கல்லா பாலம் கிராமத்தில் உள்ள வெங்கடரமணா, தீவிர தெலுங்கு தேச கட்சி தொண்டர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு சுருண்டு விழுந்து கோமா நிலைக்கு சென்றார்.
உடனடியாக அவரை ஸ்ரீகாளஹஸ்தி எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். தங்களப்பாலம் பூத் பொறுப்பாளராக வெங்கடரமணா தெலுங்கு தேச கட்சி சார்பில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.