மீடியா ஒன் டிவிக்கான தடை ரத்து! தேச பாதுகாப்பு என தடை போட்ட மத்திய அரசுக்கு கண்டிப்பு

 
one

மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டிருக்கிறது . தடை போட்ட மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 கேரள மாநிலத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று மீடியா ஒன்.   இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தடை விதித்தது.   மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டியலில் இருந்து மீடியா ஒன்  நீக்கப்பட்டதால் அதன் ஒளிபரப்பு சேவையும் நிறுத்தப்பட்டது.

k  

 இதை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் மீடியா ஒன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவை ரத்து செய்தது.

 மேலும்,   தேச பாதுகாப்பு என்று சொல்லி மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கை இல்லை என்று உச்ச  நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது .  பத்திரிக்கை சுதந்திரம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது . ஜனநாயக நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசன உரிமை இருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

 தேசப் பாதுகாப்பு என சொல்லி முத்திரையிடப்பட்ட உரையில் மத்திய அரசு ஆவணங்கள் அளித்ததற்கும் உச்ச நீதிமன்றம் தன் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.