ஆன்லைன் செயலி மூலம் நிர்வாண வீடியோ கால் பேசி ரூ.18 லட்சம் சம்பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருப்பதியில் கணவனின் வற்புறுத்தலின் பேரில் ஆன்லைன் செயலி மூலம் நிர்வாணமாக வீடியோ கால்களில் பேசிய மனைவிக்கு நேர்ந்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் ரெட்டி. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் முனிரத்தினம் ரெட்டி தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியை ஆன்லைன் செயலி மூலம் வீடியோ காலில் நிர்வாணமாக பேச வேண்டும் என்று அடித்து துன்புறுத்தி பட்டினி போட்டு வற்புறுத்தினார். இதனால் கணவனின் தொல்லை தாங்காமலும் இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் மானக்கேடு என்றும் பயந்து முனிரத்தினம் ரெட்டியின் மனைவி ஒரு செயலி மூலம் வரும் அழைப்புகளுக்கு நிர்வாணமாக பேசி வந்தார். இதன் மூலம் சுமார் ரூ.18 லட்சத்திற்கு மேல் கிடைத்த பணத்தை பயன்படுத்தி அவர்கள் தங்க ஆபரணங்களை வாங்கியுள்ளன்ர.
இந்நிலையில் தன்னுடைய மனைவியின் ஆபாச வீடியோவை ஒரு வீடியோ ரெக்கார்ட் செய்து அனுப்பியதோடு ரசிகர்கள் அதிகமாகி அவருடைய நிர்வாண அழைப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக பரவின. இதனால் மனைவிக்கு இத்தனை ரசிகர்களா என்று பொறாமை கொண்ட முனிரத்தினம் ரெட்டி மனைவியை தனிமைப்படுத்தி விரட்டிவிட்டார். கணவனால் நிர்வாண வீடியோ செயலிக்கு தள்ளப்பட்டு தற்போது தன்னை விரட்டியடிக்கப்பட்டது குறித்து தனக்கு இழைக்கப்பட்ட தீங்கு கொடுமை ஆகியவை பற்றி ஸ்ரீதேவி திருப்பதி ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலர் ரமணா இரவு ஓட்டலுக்கு வருகிறாயா என்று அவருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி துன்புறுத்தி இருக்கிறார்.

இனிமேல் இந்த விவகாரத்தை சொல்வதற்கு இடமே இல்லை என்று கருதிய ஸ்ரீதேவி, திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் கணவனால் இழைக்கப்பட்ட கொடுமை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கு சென்ற போது காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் தன்னுடன் வருகிறாயா? என்று கேட்டு அனுப்பிய குறுந்தகவல் ஆகியவற்றை கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்து நீங்கள் தான் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று புலம்பினார்.


