அடுத்த தீபாவளி வரைக்கும் அணையாமல் எரியும் தீபம் -வாடாமல் இருக்கும் பூ - சுடச்சுட அப்படியே இருக்கும் அன்னம்

 
h

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்திற்கு மட்டுமே திறக்கப்படும் அம்மன் ஆலயம் உள்ளது.  இந்த அம்மன் ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் அடுத்த தீபாவளி வரைக்கும் அணையாமல்  இருக்கும்.  அம்மனுக்கு சார்த்தப்படும் பூவும் அடுத்த ஆண்டு வரைக்கும் வாடாமல் இருக்கும். அம்மனுக்கு முன்பு ஒரு குடம் தண்ணீர் வைக்கப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது.  அதுவும் அடுத்த ஆண்டு வரைக்கும் குறையாமல் அப்படியே இருக்கிறது. அம்மனுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னமும் கெடாமல் அடுத்த ஆண்டு வரைக்கும் சுடச்சுட அப்படியே இருக்கும்.  இந்த அதிசயம் கண்டு, அம்மனின் மகிமை என்று பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகின்றனர்.

ha

 அம்மன் நெற்றியில் வைக்கப்பட்டிருக்கும் சந்தனமும் அடுத்த ஆண்டு வரைக்கும் அப்படியே காயாமல் இருக்கிறது.   இப்படிப்பட்ட ஆச்சரியமான அதிசயமான அம்மன் ஆலயம் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மேற்கே 180 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹாசன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஹாசனாம்பா கோவில்.  

ஹாசனாம்பா கோவில்  கருவறையில் சின்ன சின்ன கற்களே சுயம்பு வடிவத்தில் அமைந்திருக்கிறது.   அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை தினத்தினை முன்னிட்டு  கோவில் நடை திறக்கப்படுகிறது.   மிகவும் அதிசயமான சக்தி வாய்ந்த அம்மனாக வீட்டிற்கும் 3 சுயம்பு வடிவ கற்களின் மீதும் சிவப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.   அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டிவிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

haa

 அம்மனுக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கின்றன.   கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய்தீபத்தில் நெய்யை   எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படுகிறது.   இப்படி ஊற்றப்படும் நெய் தீபம் அடுத்த ஆண்டு வரைக்கும் அணையாமல் ஒருவருடம் இருந்துகொண்டே இருப்பதுதான் ஆச்சரியம்.  அந்த நெய்யும் குறையாமல் அப்படியே இருக்கிறது. 

அம்மன் நெற்றியில் இருந்து சுரண்டப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.  இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது.  அபிஷேகம் முடிந்த பின்னர் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.   சுடச்சுட நைவேத்தியம் செய்யப்படுகிறது.   சாமிக்கு முன் ஒரு குடம் தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.   இந்த தண்ணீர் தான் அடுத்த ஆண்டு வரைக்கும் குறையாமல் அப்படியே இருக்கிறது.   சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் அன்னம் அடுத்த ஆண்டு வரைக்கும் சுடச்சுட அதே சூட்டில் அப்படியே இருக்கிறது.

te

பிரசித்தி பெற்ற கோவில்கள் எல்லாம் நாள்தோறும் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படிப்பட்ட பிரசித்தி கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.   ஹாசனம்மா ஆலயம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட்டாலும் 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு  தரிசனம் செய்து வருகிறார்கள்.

 இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி அன்று மதியம் 12 .19 மணிக்கு ஹாசனம்மா கோவில் கருவறை திறக்கப்பட்டது.   அப்போதும் கடந்த ஆண்டு நடை மூடும்போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது.

haa

 வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  ஹாசனம்மா மற்றும் சித்தேஸ்வரர் கோயில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்வர் எடியூரப்பா தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்.

ஹாசனம்மா கருவறை திறக்கப்பட்டது முதல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கோபாலய்யா,  சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜோலே,  பிரீத்தம் கவுடா எம்எல்ஏ , மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரீஷ்  உள்ளிட்டோர் வந்து  சிறப்பு தரிசனம் செய்து செல்கின்றனர்.