நடப்பு பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

 
Parliament

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.

Parliament

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மரபுப்படி இடைக்கால பட்ஜெட்டாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி முதல் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி நடப்பு அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

nirmala
தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரையிலான காலத்துக்கான அரசின் செலவுக்கான அனுமதி பெறுவதற்காகவே பட்ஜெட் இருக்கும் என்றும்,  தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசுதான் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.