அடுத்த சோகம்.. உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து..

 
அடுத்த சோகம்.. உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. அடுத்த சோகம்.. உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து..

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். 

அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  ஏர் இந்தியா பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. உலக விமான போக்குவரத்துத் துறையே அதிர்ச்சிக்கு ஆளானது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 242 பேர் உள்பட 274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தின் துயரத்திலிருந்தே மீளாத நிலையில், அதற்குள்ளாக உத்தராகண்டில்  ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. 

அடுத்த சோகம்.. உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து..

உத்தராகண்ட் மாநிலம்  கௌரிகுந்த் அருகே இன்று காலை ( ஜூன் 15) டேராடூனில் இருந்து கேதர்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் மாயமானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.  பின்னர் மாயமான அந்த ஹெலிகாப்டம் விபத்தில் சிக்கியதாக உத்தராகண்ட் ஏடிஜிபி முருகேசன் தெரிவித்தார். மேலும், ஹெலிகாப்டரில் பயனம் செய்த அனைவருமே இறந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தினார். அந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.

கேதர்நாத் தலமானது உத்தராகண்ட் மாநிலத்தின் மேல், இமையமலைப் பகுதியில் அமைந்துள்ளது.  பொதுவாகவே இந்தப்பகுதி கடினமான நிலப்பரப்பு கொண்டதாகும். அத்துடன் வானிலை நிலவரமும் துல்லியமாக கணிக்க முடியாதபடி இருக்கும்.  அங்கு அமைந்துள்ள புன்னிய தலமான பார்க்கப்படும் கேதர்நாத் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது தான் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.