ஓய்வூதியதாரர்களுக்கு பேரதிர்ச்சி! மோடி அரசு திடீர் அறிவிப்பு
Aug 25, 2024, 09:30 IST1724558447000
’ஒருமித்த ஓய்வூதிய திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும். ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.