திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்ல 3வது மலைப்பாதை - விரைவில் ஏற்படுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு..

 
சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு; திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்ல விரைவில் 3வது மலைப்பாதை ஏற்படுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்ல இரண்டு மலைப்பாதை வழித்தடங்கள் உள்ளன. அடர்ந்த இந்த வனப்பகுதி  வழியாகவே பக்தர்கள் கோவிலுக்குச் செல்வர். ஆனால் மழைக்காலங்களில் இந்தப் பாதைகளில் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுதால், சாலைகள் சேதமடைகின்றன. சீரமைப்புப் பணிகள் முடிவடையும் வரை அந்தப்  பாதைகளில், வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் ஒரு  வழித்தடத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருப்பதி மண்சரிவு

இதனால் விரைவில் 3வது மலைப்பாதை ஏற்படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடப்பாவை - திருமலையுடன் இணைக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் சாலையை  சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கென 3 கோடியே 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 3 வாரங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று கூறினர்.

திருப்பதி கோவில்

மலைப்பாதையில் எதிர்காலத்தில் மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க, மும்பை மற்றும் சென்னை ஐஐடி நிபுணர்களிடமிருந்து ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்தப் 3 வது மலைப்பாதை சீரமைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.