குளியலறையில் சடலமாக கிடந்த 3 பேர்! தெலங்கானாவில் அதிர்ச்சி

 
தெலங்கானா

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் குளியல் அறையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

death


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சனத் நகர் ஜெக் காலனியில் உள்ள உட்சாரி ரெசிடென்சி அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் உள்ள பிளாட் 204ல் ஆர்.வெங்கடேஷ்  (55), அவரது மனைவி மாதவி (50), மகன் ஹரி (30) ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டின் குளியலறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஒருவர் காப்பாற்ற சென்று மூன்று பேரும் உயிரிழந்தனர். 

மாலை வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டில் உள்ளவர்களை வெளியே இருந்து அழைத்துள்ளனர். கதவு மூடப்படாமல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் குளியலரையில் சடலமாக இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மூவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.