SIR பணி நெருக்கடியால் 55 பேர் மரணம்- திருச்சி சிவா

 
திருச்சி சிவா திருச்சி சிவா

SIR பணிச்சுமை மற்றும் நெருக்கடி காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்ததாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்பி திருச்சி சிவா, “SIR பணிச்சுமை மற்றும் நெருக்கடி காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் SIR குறித்து விவாதிக்க அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. SIR குறித்த விவாதத்தை அரசு ஏற்காததால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அவையில் பேச அனுமதிக்கும்படி, நாடாளுமன்றத்தில் கேட்டால் அமளியில் ஈடுபடுவதாக அரசு அவதூறு பரப்புகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததை ஒரு மரபாக பாஜக அரசு வைத்துள்ளது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு தான் நாடாளுமன்றம் உள்ளது.

மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம். அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. குளிர்கால கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் 15 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் பேச அனுமதிதான் கேட்கிறோம்; அவைக்கு குந்தகம் விளைவிக்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட வருவதில்லை. வழக்கம்போல் ராஜ்நாத் சிங் வருகிறார், கேட்டுகொள்கிறார், கிளம்பிவிடுகிறார். நாடாளுமன்ற நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்ரன. நடைபெறும் நாட்கள் குறைக்கின்றன. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் இதற்கு ஜனநாயக நாடு என பெயர்” என்றார்.