திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படுகிறது!
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது. அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28-ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 அன்று மீண்டும் திறக்கப்படும். 29-ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே 28-ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையாம் கோயில் கதவுகள் மூடப்படும். கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்படும். இதன் காரணமாக 28- ஆம் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் தொடர் விடுமுறையால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் காரணமாக நேரடியாக எந்தவித டோக்கன்களும் இல்லாமல் வரும் பக்தர்கள் வரிசை 5 கிலோ மீட்டர் வரை உள்ளதால் சுவாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே நாளையும் திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


