திருப்பதி லட்டு சர்ச்சை- விற்பனை இருமடங்காக உயர்வு

 
கொரோனா ஊரடங்கு: பாதி விலையில் திருப்பதி லட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு

சர்ச்சைகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சுமார் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகின.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சுமார் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. முன்பை விட நாள் ஒன்றுக்கு 60,000 லட்டுகள் வரை கூடுதலாக விற்பனையாவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி 3 லட்சத்து 70 ஆயிரத்து 811 லட்டுக்களையும், 15 ஆம் தேதி 4 லட்சத்து 7,545 லட்டுகளையும், 16ஆம் தேதி 3 லட்சத்து 88,485 லட்டுக்களையும், 17ஆம் தேதி 3 லட்சத்து 42068 லட்டுக்களையும்,18 ஆம் தேதி 4 லட்சத்து 68 லட்டுக்களையும், லட்டு சர்ச்சை வெளியான பிறகு  19ஆம் தேதி 3 லட்சத்து 59 ஆயிரத்து 660 லட்டுகளையும், 20 ஆம் தேதி 3 லட்சத்து 13 ஆயிரத்து 954 லட்டுகளையும், 21ஆம் தேதி 3 லட்சத்து 67 ஆயிரத்து 607 லட்டுக்களையும், 22 ஆம் தேதி 3 லட்சத்து 46 ஆயிரத்து 640 லட்டுக்களையும், 23ஆம் தேதி மூன்று லட்சத்தை 8,774 லட்டுக்களையும் ஆக மொத்தம் கடந்த 10 நாட்களில் 36 லட்சத்தி 04 ஆயிரத்து 617 லட்டுக்களை பக்தர்கள் வாங்கி சென்றுள்ளனர்.