திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 18 மணி நேரத்திற்கு பின் தரிசனம்

 
திருப்பதி திருப்பதி

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது.

புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியதால் வெளியே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோகர்பன் அனை அருகே அக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரமும், ரூ 300 டிக்கெட் பக்தர்கள்  4 மணி நேரத்திற்கு மேலும் சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 6 மணி நேரத்திர்கு காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 73581 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 2.60 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.