மேற்கு வங்க இடைத்தேர்தல் - 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

 
mamata

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 294 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனிடையே அம்மாநிலத்தில், 6 தொகுதிகள் காலியான நிலையில், அந்த தொகுதிகளுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவுள்ளது. தொடர்ந்து 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது. இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜகவும், 5 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.