மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி! ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?
Updated: Jun 5, 2024, 10:53 IST1717564981017
மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மக்களவை சபாநாயகர் பொறுப்பை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என இரு கட்சிகளும் பாஜகவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகர் பதவி வேண்டும் என்று கோரிக்கையை முக்கிய நிபந்தனையாக வைக்க சந்திரபாபு திட்டமிட்டுள்ளார். 1998 இறுதியின் வாஜ்பாய் ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி சபாநாயகராக இருந்தார்.

ஆட்சியை தக்க வைக்க ஆதரவு தரும் கட்சிகளுக்கு துணைப் பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு செய்தது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இரு கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


