ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்!

 
IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 39வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.  குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில்  5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.  
இதேபோல் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.

இதேபோல் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன.