குஜராத்தை புரட்டிப்போட்ட பிபோர்ஜாய் புயலுக்கு இரண்டு பேர் பலி!

 
குஜராத்

புபோர்ஜாய் புயலால் குஜராத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

'பிபர்ஜாய்'  புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுபெற்றது.  இது 15-ந்தேதி (நேற்று) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த இந்த புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. நள்ளிரவில் புயல் கரையை கடந்த நிலையில், அந்த சமயத்தில்  மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இந்த அசுர காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் சரிந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோரு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. 

இந்நிலையில், குஜராத்தில் பிபோர்ஜாய் புயலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் காரணமாக இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளதாகவும்,  சுமார் 940 கிராமங்கள் மின்சாரம் இன்றி  இருளில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த புயலால் 23 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. புயல் கரையை கடந்ததும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின்சார விநியோகத்தை சீர்படுத்தும் விதமாக மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.