பீகாரில் கட்டப்பட்டுவரும் அக்வானி பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்தது

 
under-construction bridge in bihar bhagalpur collapses for 3rd time

பாஜக ஆளும் பீகார் மாநிலம் பாகல்பூரில் ரூ.1,710 கோடி செலவில் 9 ஆண்டுகளுக்கு மேலாக கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் ஆக்வானி பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்துள்ளது.

On A Record Breaking Spree: Under-Construction Bridge In Bihars Bhagalpur  Collapses For 3rd Time | India News | Zee News

பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தில் உள்ள அகுவானி காட் வரை இணைக்கப்பட வேண்டிய இந்த பாலம், ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் சுல்தங்கஞ்ச்-அகுவானி காட் பாலம் இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இடிந்து விழுந்ததால், கட்டுமான தரம் மற்றும் திட்ட மேலாண்மை குறித்து கடும் கவலை எழுந்துள்ளது. எனினும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.  இப்பாலத்தின் பகுதிகள் ஏற்கனவே ஏப்ரல் 2022, ஜூன் 2023 ல் இடிந்து விழுந்துள்ளன.


எஸ்பி சிங்லா கட்டுமான நிறுவனம் கங்கை நதியில் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டுவருகிறது. கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அகுவானி-சுல்தாங்கஞ்ச் கங்கை பாலத்தின் பணி 2014 இல் தொடங்கப்பட்டது, அதை முடிப்பதற்கான காலக்கெடு எட்டு முறை தோல்வியடைந்தது. ஏப்ரல் 2022 இல் புயல் காரணமாக பாலம் சில சேதங்களை சந்தித்தது குறிப்பிடதக்கது.