உயரும் தங்கம் விலை - செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு

 
tn

​​​​​​​ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்தபின் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.  இதன் பிறகு பாஜக அரசின் கடைசி முழு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆகும்.

  • தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிப்பு
  • தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு
  • ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டம் மூலம் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்!
  • வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும்

tn

  • ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைப்பு 
  • 2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம்!
  •  பட்ஜெட்டில் சிகரெட்டுகள் மீதான சுங்கவரி அதிகரிப்பு; விலை அதிகரிக்க வாய்ப்பு
  • உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைப்பால், செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு

tn

  • உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு
  • பேட்டரிக்கான சுங்கவரி குறைக்கப்பட்டதால், அந்த வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்பு
  • மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
  • நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என கணிப்பு
  • 5G சேவைகளை மேம்படுத்த 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்

tn

  • ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்.
  • ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்