தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அறிவிப்பு..

 
விமான நிலையம்


ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு  புதிய கட்டுப்பாடுகள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில்   ஆயிரங்களில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை , இந்த வாரம் லட்சங்களாக அதிகரித்துவிட்டது.  வைரஸ் பரவகைக் கட்டுப்படுத்த மத்திய  அரசு,  ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில்  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே விதித்திருந்தது. இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதிகளின்படி,  தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிந்து அதில் நெகட்டிவ் வந்தாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள்

ஒருவேளை 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனை முடிவு நெகட்டிவ் அதாவது கொரோனா இல்லை எனத் தெரியவந்தால், அடுத்த 7 நாட்களுக்கு தனது உடல்நிலையை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள்   RT-PCR சோதனை செய்து,  நெகட்டிவ் (கொரோனா இல்லை) சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும்,  அந்த RT-PCR பரிசோதனையானது 72மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியா வருவோருக்கு விமன நிலையத்தில் செய்யப்படும்  பரிசோதனையில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள்  வழக்கம் போல சிகிச்சை பெற வேண்டும், தனிமை படுத்தலில் இருக்க வேண்டும்.. ஆனால் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் கட்டாய விடுதி தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா

முன்னதாக  எச்சரிக்கை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதில் முடிவு வரும் வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். அதன்பின் வெளியே செல்ல முடியும் அல்லது இணைப்பு விமானத்தில் பயணிக்க முடியும். ஆனால் தற்போது  கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களும் தனிமை விடுதியில் இருக்க வேண்டும் என்கிற விதி  தளர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்ளவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.