2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்பொன் எண்ணை பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

 
2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்பொன் எண்ணை பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் போது  ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

நாடு முழுவதும்  கொரோனா பரவலைக் கட்டுப்பத்த தடுப்பூசி பேராயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விவரங்கள் கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதன்மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 2 வது டோஸ் மட்டும் போட்டுக்கொள்ளாதவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது.  இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 லட்சத்து 50 ஆயிரம்  பேருக்கு, முதல் டோஸ் போட்டுக்கொண்டதற்கு மட்டும் 2 தனித்தனி சான்றிதழ்கள் வந்துள்ளன.  

கொரோனா தடுப்பூசி

 கோவின் இணையதளமத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.   இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து  மத்திய சுகாதார அமைச்சகம்  நேற்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.   அதில்,   ‘கோவின்’ வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொண்ட 100 கோடிக்கு மேற்பட்டோருக்கு 190 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   மேலும்  2-வது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யும்போது, முதல் டோசுக்கு கொடுத்த அதே செல்போன் எண்ணையே அளிக்க வேண்டும் எனவும்,  அப்போதுதான் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர் நபர் ஒருவரே என   ‘கோவின்’ வலைத்தளம் அங்கீகரித்து,   2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்பொன் எண்ணை பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

அத்துடன் முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் வெவ்வேறு செல்போன் எண்களை கொடுத்தால், ‘கோவின்’ வலைத்தளம் அதை 2 வெவ்வேறு தனிநபர்களாக கருதி,   2 டோஸ்களும் 2 வெவ்வேறு முதல் டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ்களாகவே வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும்  2 வெவ்வேறு செல்போன் எண்களுக்கு ஒரே அடையாள ஆவணம் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும்,  ஆகையால்  மனிதர்களால் ஏற்பட்ட இந்த தவறை தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறுவது அபத்தமானது என்றும் கூறியுள்ளது.