மத்திய பட்ஜெட்... ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு, பான் கார்டை அடையாள ஆவணமாக மாற்ற திட்டம்

 
ரயில்வே ரயில்வே

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரயில்வே மேம்பாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு.
3 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்.
நகப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

பணம்
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த இடங்களை மேம்படுத்த ரூ.5,300 கோடி ஒதுக்கீடு.
ரூ.7 ஆயிரம்  கோடியில் மின்னணு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டம்.
நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

பான் கார்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒட்டு மொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை.
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
பான் கார்டை அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம்.