மத்திய பட்ஜெட்... முதியோர் சேமிப்பு திட்டத்தில் நிரந்தர வைப்புக்கான உச்ச வரம்பு அதிகரிப்பு

 
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

முதியோர் சேமிப்பு திட்டத்துக்கான நிரந்தர வைப்புக்கான உச்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தேசிய தகவல் நிர்வாக கொள்கை உருவாக்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.20,700 கோடி ஒதுக்கீடு.
பயோ மின்திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கடன் செயலியால் விபரீதம்: போட்டோவை மார்பிங் செய்து  ஆபாச மிரட்டல்.. உயிரை மாய்த்துக்கொண்ட ஐ.டி. ஊழியர்
3 ஆண்டுகளில் ஒர விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற இலக்கு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.9 ஆயிரம் கோடி கடன் அளிக்க திட்டம்.
5ஜி செயலிகளை மேம்படுத்த 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்துக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
மகிளா சம்மான்  சேமிப்பு திட்டத்துக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

நிதிப் பற்றாக்குறை
நாடு முழுவதும் 50 இடங்களை  தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்.
முதியோர் சேமிப்பு திட்டத்துக்கான நிரந்தர வைப்புக்கான உச்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
நிதிப்பற்றாக்குறையை 2025-26ம் நிதியாண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு.
உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி குறைப்பு.