மத்திய பட்ஜெட்... சிறுதானியகள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம், விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடி

 
சிறுதானியங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். கம்பு , சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம். 
சுற்றுலாவை மேம்படுத்த இயக்கமாக எடுத்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு. மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

நிர்மலா சீதாராமன்
விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு. 
பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். 
157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும். 
குழந்தைகள்  மற்றும் வளர் இளம் பருவனத்திற்காக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். 
குழந்தைகளுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

டிஜிட்டல் நூலகம்
மோடி ஆட்சியில் தனிநபர் வரும் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. 
விவசாயத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி உருவாக்கப்படும். 
ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியார் பயன்படுத்தலாம். 
740 ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 
அடிப்படை கட்டமைப்ப திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.