கர்ப்பிணி வயிற்றை கிழித்த கொடூர கணவருக்கு ஆயுள் சிறை!

 
pregnancy pregnancy

மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள, அவரது வயிற்றைக் கிழித்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் புடாவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, குழந்தை ஆணா பெண்ணா என்பதை பரிசோதிக்க முயன்று  தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவாளால் வெட்டியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டம்பரில், புடானின் சிவில் லைன்ஸில் வசிக்கும் பன்னா லால் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது மனைவி அனிதாவைத் தாக்கிய சம்பவம் நடந்தது.

tt


திருமணமாகி 22 வருடங்கள் ஆன இந்த ஜோடி ஐந்து பெண் குழந்தைகளுக்கு பெற்றோர். இருப்பினும், அந்த நபர் ஆண் குழந்தையைப் பெற விரும்பினார், இதனால் தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, ஆண் குழந்தைக்கு தந்தையாவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

அத்துடன் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்த நிலையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் தொடர்பாக தம்பதியினர் மீண்டும் சண்டையிட்டனர். ஆத்திரத்தில், பன்னா லால், அனிதாவின் வயிற்றை அறுத்து,  குழந்தையின் பாலினத்தை அறிய அரிவாளைப் பயன்படுத்தி வயிற்றைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவரது குடல்கள் கிழிந்ததாகவும் கூறப்படுகிறது. 

arrest

அங்கிருந்தவர்களின் உதவியுடன் கணவனின்  தாக்குதலில் இருந்து மனைவி அனிதா உயிர் பிழைத்த போதிலும், வயிற்றில் இருந்த  ஆண் குழந்தை, தாக்குதலால் உயிரிழந்தது. இந்த வழக்கில் மாணவியின் வயிற்றைக் கிழித்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.