காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க பரிந்துரையில் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளுக்கு நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க பரிந்துரையில் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளுக்கு நன்றி. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். இரு நாட்டு தலைவர்களும் எடுத்த உறுதியான முடிவால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உதவியாக இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறது. ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வுகாண இந்தியா- பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயார். சண்டை நிறுத்தம் என்ற முடிவை எட்ட, அமெரிக்க உதவ முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். வலிமை, ஞானம், மன உறுதியைப் பெற்ற வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமைகள்


