“காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது... மூளைச்சலவை செய்யக்கூடாது”- விஜய் தேவரகொண்டா

 
ச் ச்

காஷ்மீரில் உள்ளவர்களுக்கு நல்ல கல்வி வழங்கப்பட வேண்டும் அவர்களை மூளைச்சலவை செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.


சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசுகையில்,  ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்தது. இறந்தவர்களின் குடும்பங்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளன. அந்த வலியை நேரில் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அதன் வலியையும் கோபத்தையும் உணர்கிறோம். அது நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு   முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். அவர்களை மூளைச்சலவை செய்ய விடக்கூடாது. நான் சொல்றுள்ளேன், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. காஷ்மீரிகளும் மனிதர்கள்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு குஷி படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தினேன். அப்போது அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட  நிறைய நல்ல நினைவுகள் அனுபவங்கள் உள்ளன.

பாகிஸ்தானியர்களால் தங்கள் சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள முடியாதபோது, ​​அவர்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்? அங்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை அந்த நாட்டிம் வளர்ச்சி மீதும் அந்த நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் காஷ்மீரில் என்ன செய்ய போகீறீர்கள். பாகிஸ்தானைத் தாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. பாகிஸ்தானின் செயல்பாடு இதேபோல் தொடர்ந்தால்,  பாகிஸ்தானியர்கள் வெறுப்படைந்து தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி அடைந்து தாக்குவார்கள். தற்போது நடப்பது பார்த்தால் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்தது போல உள்ளது.  கொஞ்சம் கூட ஞானம்  இல்லாமல், குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் செய்யப்படுகின்றனர்.  ஒரு மக்களாகிய நாம் ஒன்றாக ஒன்று சேர வேண்டும். நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்” என்றார்.