தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சுதர்சன்புரா புலியாவை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த காரில் திடீரென தீப்பற்றியதால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்திலேயே கார் முற்றிலும் தீ பரவி குபுகுபுவென எரிந்தது. பின்னர் விபத்துக்குள்ளான கார் திடீரென சாலையில் வேகமாக ஓடியது. கார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சாலையில் பரபரப்பான போக்குவரத்து இருந்தபோதிலும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
जयपुर में आग की तबाही: बिना ड्राइवर के बेकाबू दौड़ती कार ने मचाई दहशत #Jaipur #CarmenDiPietro #RajasthanNews #reelsvideoシ #Trending pic.twitter.com/XrBK8QuSlD
— Aaazad Bol (@aazadbolnews) October 13, 2024
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இது விபத்து தொடர்பான காட்சி வழிப்போக்கர் ஒருவரால் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.


