சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மரம் விழுந்து பலி!
விசாகப்பட்டினத்தில் மரக்கிளை விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சீதம்மாதராவில் உள்ள ஏ.எம்.ஜி. மருத்துவமனைக்கு எதிரே உள்ள பிரதான சாலையில் ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது மரக்கிளை உடைந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த எம்.வி.பி. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். இதில் இறந்த பெண் பூர்ணி 40 என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் பகுதியளவு சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த எம்எல்ஏ விஷ்ணுகுமார் ராஜு, நிலைமையை ஆய்வு செய்தார். மீட்புக் குழுவினருடன் சேர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அவசரமாக மரத்தை வெட்டி அகற்றினர். இறந்த பெண் பூர்ணி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர் .


