ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் - 11 மணி நிலவரப்படி 24.74% வாக்குகள் பதிவு

 
election

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவையின் காலம் நிறைவடையவுள்ளதை தொடர்ந்து அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ec


 
இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 11 மணி நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் 24.74% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.