வயநாடு நிலச்சரிவு : உதவி எண்கள் அறிவிப்பு..

 
வயநாடு நிலச்சரிவு : உதவி எண்கள் அறிவிப்பு.. 


கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித்தீர்த்து  வருகிறது. அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காட்டாற்று  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வயநாடு சூரல்மலை பகுதியில்   இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து  அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் ஒரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலச்சரிவுகளால் சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  

வயநாடு நிலச்சரிவு : உதவி எண்கள் அறிவிப்பு.. 

பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  இந்நிலையில் அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நிலச்சரிவு எற்பட்ட இடத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாலும் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், மீட்பு பணியில் களமிறக்க 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்படவுள்ளன. தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.