மேற்கு வங்க ரயில் விபத்து - உயிரிழப்பு 15 ஆக உயர்வு

 
rr rr

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

rr

மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை லோகோ பைலட் உள்ளிட்டோர்   உயிரிழந்துள்ளனர். 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மேற்கு வங்கத்தின் பனிஷ்தேவா பகுதியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள், பேரிடர் மீட்புக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

death

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பங்சிடவா பகுதியில் சிக்னலில் நிற்காமல் வந்த சரக்கு ரயில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் மீது மோதிய விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது. கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்