இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இதுதான் காரணம்! - உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்

 
who

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை புதிய ஒமைக்ரான் மாறுபாடுதான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். இதேபோல் நேற்றைய கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,354 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 876 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid

 இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை புதிய ஒமைக்ரான் மாறுபாடுதான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையோ அல்லது இந்த வகை தொற்றால் அதிக உயிரிழப்புகளோ இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக இல்லை. மேலும் இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 3 நாளில் குணமாகி விடுகிறார்கள். அதே நேரம் சாதாரண தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம் எனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.