கட்டிலில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்! இருவரையும் வெளுத்தெடுத்த மனைவி

 
Wife Caught Husband Illegal Affair in Vizag

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கணவர் திருமணத்திற்கு புறம்பாக வேறு ஒரு பெண்ணுடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதை அறிந்து உறவினர்களுடன் சென்ற மனைவி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி சோடவரம்  எல். சிங்கவரத்தை சேர்ந்தவர் ஹரிதா. ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் விவேக். இருவரும் காதலித்து பெரியவர்கள் முன்னிலையில்  2020 ஆண்டு டிசம்பர் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் குடும்ப வாழ்க்கை  சில காலம் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்குள் விவேக், மனைவி உயரம் குறைவாக இருப்பது உள்ளிட்ட ஒரு சில காரணங்கள் கூறி விவாகரத்து கேட்டு வந்தார். 

இந்நிலையில் ஸ்பாவிற்கு  செல்லும்போது விவேக்கிற்கு அறிமுகமான மாதுரி என்ற பெண்னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. எனவே மாதுரிக்கு ஸ்கூட்டி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த ஹரிதா சண்டையிட்டதால்  மனைவியுடன் தகராறு செய்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். மேலும் விசாகப்பட்டினத்தில் சீதம்தாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாதுரியுடன் விவேக் தங்கி வந்துள்ளார். 

இதனை அறிந்த ஹரிதா கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என உறவினர்களுடன் விவேக் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று மாதுரியுடன் இருப்பதை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் விவேக் - மாதுரியை தாக்கினார். இதற்கிடையே மாதுரி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், விவேக்கை பிடித்து விசாகப்பட்டினம்  புச்சய்யாபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனக்கு நியாயம் பெற்று தர வேண்டும் என முறையிட்டுள்ளார். ஆனால் இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அவர்களை நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.