காரை ரிவர்ஸ் எடுத்த போது நடந்த விபரீதம்; 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!!

 
tt tt

இளம் பெண் ஒருவர் மலைப்பகுதியில் கார் ஓட்டி கற்றுக் கொண்டிருந்தபோது கார் பள்ளத்தாக்கில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

rt

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஸ்வேதா தீபக் சர்வாஸ் . இவர் தனது நண்பர் சூரஜ் உடன் நேற்று பகல் 2 மணி அளவில் ஒளரங்காபாத்தில் இருந்து கலிப்பஞ்சன் ஹில்ஸ்க்கு சென்றுள்ளார்.  அங்கு காரை ஓட்டி பழகிக் கொண்டிருந்த இளம் பெண் ஸ்வேதா திடீரென காரை பின்னோக்கி நகர்த்தியுள்ளார் . இதில் கார் எதிர்பாராத விதமாக 300 அடி பல தாக்கில் பாய்ந்துள்ளது. இதை அவரது நண்பர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.


 ஸ்வேதா ஆக்சிலேட்டரை அழுத்த காரின் வேகம் அதிகரித்துள்ளது.  வெளியே இருக்கும் அவரது நண்பர் மெதுவாக செல்லும்படி எச்சரிக்க அவர் கிளச்சை பிடிக்க சொல்லி கத்துவதும் அந்த வீடியோவில் தெளிவாக கேட்கிறது.  இருப்பினும் தொடர்ந்து அவர் ஸ்வேதாவுக்கு உதவ முன்வந்த போதிலும் கார் பள்ளத்தாக்கில் பாய்கிறது.  இந்த காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன.  சுமார் 300 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கார் விழுந்ததில் ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.