கிட்னி தானம் கொடுக்க வந்த பெண் தவறான சிகிச்சையால் மரணம்
விசாகப்பட்டினத்தில் இருந்து பணத்திற்காக சிறுநீரக தானம் கொடுப்பதற்காக அழைத்து வரப்பட்ட பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்தனர். மதனப்பள்ளி அரசு மருத்துவமனை டயாலிசிஸ் மைய பொறுப்பாளர் பாலரங்கடு மற்றும் புங்கனூர் டயாலிசிஸ் மைய பொறுப்பாளர் பாலாஜி நாயக் ஆகியோர் தங்களிடம் டயாலிசிஸுக்கு வரும் வசதியான சிறுநீரக நோயாளிகளை அடையாளம் கண்டு, பணம் செலவழித்தால் சிறுநீரகத்தை ஏற்பாடு செய்வது கூறி பணம் பெற்று கொள்கின்றனர் . அவ்வாறு விசாகப்பட்டினத்தின் மதுரவாடாவைச் சேர்ந்த சிறுநீரக தரகர்களான பெல்லி பத்மா, காகர்லா சத்யா மற்றும் வெங்கடேஷ் ஆகியோருடன் அவர்கள் சீறுநீரக தானம் செய்பவர்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு ஒரு கமிஷன் வழங்கப்படுகிறது. அதன்படி அவர்களிடம் பேசி சிறுநீரக தானம் செய்பவர்களை ஏற்பாடு செய்து வந்தனர். தரகர்கள் மூலம் விசாகப்பட்டினத்திலிருந்து மதனப்பள்ளிக்கு தானம் செய்பவர்களை அழைத்து வந்து சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மதனப்பள்ளியில் உள்ள எஸ்பிஐ காலனியில் நடத்தப்படும் குளோபல் மருத்துவமனையில், டாக்டர் அவினாஷ், டாக்டர் சாஸ்தவி மற்றும் அங்கு பணிபுரியும் நீரஜ் என்ற இடைத்தரகர் ஆகியோர் நீண்ட காலமாக இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எந்த அனுமதியும் இல்லாமல் நடத்தி வருகின்றனர். அவ்வாறு விசாகப்பட்டினத்தின் மதுரவாடாவைச் சேர்ந்த சூரிபாபுவின் மனைவி, யமுனாவின் சிறுநீரகத்தைப் தானம் அளிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை மதனப்பள்ளி குளோபல் மருத்துவமனைக்கு யமுனா அழைத்து வரப்பட்டு திங்கட்கிழமை, சிறுநீரகத்தை அகற்றும் போது ஏற்பட்ட மருத்துவ சிக்கல்கள் காரணமாக யமுனா இறந்தார்.

அவரது கணவர் சூரிபாபுவுக்குத் தெரியாமல், விஷயம் வெளியே வராமல் ரகசியமாக உடலை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற முயன்றார். இறந்தவரின் கணவர் சூரிபாபு இந்த விஷயத்தை அறிந்து, அவர் 112 ஐ அழைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திருப்பதி கிழக்கு காவல் நிலைய எஸ்.ஐ. ஸ்ரீனிவாசுலு திருப்பதி வழியாக செல்ல இருந்த உடலைப் பிடித்து, விவரங்களைச் சேகரித்த பிறகு விசாரணையைத் தொடங்கினார். மதனப்பள்ளி அரசு மருத்துவமனை பாலரங்கடு டயாலிசிஸ் மைய பொறுப்பாளர் மற்றும் மதனப்பள்ளி குளோபல் மருத்துவமனை அமைந்துள்ள புங்கனூர் அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் பொறுப்பாளர் பாலாஜி நாயக் ஆகியோரின் ஈடுபாட்டுடன் இவை அனைத்தும் நடப்பதை அறிந்து குளோபல் மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் அவினாஷ், டாக்டர் சஷ்வதி மற்றும் நீரஜ் ஆகியோரை மதனப்பள்ளி இரண்டாவது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ரெட்டி கைது செய்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குளோபல் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் அவினாஷின் தந்தை டாக்டர் ஆஞ்சநேயுலு, சித்தூர் டிசிஎச்எஸ். ( மாவட்ட மருத்துவமனை ஒருங்கிணைப்பு சேவை ) அதிகாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எந்த அனுமதியும் இல்லாத நிலையில், லட்சக்கணக்கான பணம் பெற்று இந்த அறுவை சிகிச்சை நடத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் போலீசார் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.


