டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மரியாதை

 
delhi

ஜி20 மாநாட்டையொட்டி உலக தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று  இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது.  பிரதமர் மோடி துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது.  

delhi


இந்த நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி உலக தலைவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று 8.30 மணியளவில் உலக தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.