மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

 
Central Minister

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சார் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக  செல்ல முயன்றனர்.  அப்போது டெல்லி போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இதனிடையே பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் அழைப்பு விடுத்தார். 

anurag thakur

இந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் தற்போது சந்தித்து பேசி வருகின்றனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயி தலைவர் ராகேஷ் திகாயித் டெல்லியில் உள்ள மத்திய மந்திரிஅனுராக் தாக்கூரின் இல்லத்திற்கு நேரில் சந்தித்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.