#BIG BREAKING டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு
Updated: Nov 10, 2025, 19:29 IST1762783190347
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பல தெரு வியாபாரிகள் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்னதாக தலைநகா் டெல்லியில் மிகப்பொிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவா் கைது செய்யப்பட்டார். 300 கிலோ வெடிபொருட்களுடன் ஆண் மருத்துவா்கள் கைதான நிலையில் உடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் வெடிப்பொருட்களுடன் 7 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், இப்படி ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


