மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும்

 
ச் ச்

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என கட்டுப்பாடு கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் ஸ்ரீ சான் பார்மா என்ற பெயரில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிகாரிகள் இருமல் மருந்தை ஆய்வு நடத்தியதில் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருப்பதும், இதனால் உயிர் இழப்பு நிகழ்ந்ததும் கண்டறியப்பட்டது. 


இச்சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என கட்டுப்பாடு கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள விதிகளின்படி, மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்யமுடியும். ஆனால் இனிவரும் காலங்களில் மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.