ரூ. 3.22 கோடி விலை கொண்ட ‘லம்போர்கினி ஹரகேன் இவோ RWD’ கார் இந்தியாவில் அறிமுகம்!

 

ரூ. 3.22 கோடி விலை கொண்ட ‘லம்போர்கினி ஹரகேன் இவோ RWD’ கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ‘லம்போர்கினி ஹரகேன் இவோ RWD’ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: புதிய லம்போர்கினி ஹரகேன் இவோ RWD’ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய லம்போர்கினி ஹரகேன் இவோ RWD’ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 3.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டாண்டர்டு ஆல்-வீல் டிரைவ் மாடலுடன் ஒப்பிடும்போது இந்தக் காரில் அதிகளவு மாற்றங்கள் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக் கொண்டிருக்கிறது. மேலும் சிறந்த ஸ்டெபிலிட்டியை கொடுக்கும் வகையில் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் 8.4 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

ttn

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் இந்தக் காரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பெர்ஃபார்மன்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கார் மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் என்ஜின் 610 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 560 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஆனால் இது ஸ்டாண்டர்டு இவோ மாடலை விட 30 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 40 என்.எம். டார்க் செயல்திறன் குறைவாகும்.